தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்டவாரியாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக பேசிவருகிறார். அந்தவகையில் திமுக மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நேற்று (அக். 22) ஆலோசனை நடத்தினார்.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!