சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில்,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜியுடன் காணொலிக் காட்சி வாயிலாக இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , தலைமைச் செயலர் வெ . இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலர் டாக்டர் நீரஜ் மிட்டல், விப்ரோ நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் பி.வி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் .
இதையும் படிங்க: மத்திய, மாநில அரசு ஊழியர்களிடமிருந்து கல்விக்கட்டணம் பெறலாம்: பள்ளிக்கல்வித் துறை ஆணையர்