ETV Bharat / state

இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி; ஸ்டாலின் இரங்கல் - tamil latest news

சேலத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தீக்குளித்து உயிர்ழந்த சம்பவத்திற்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி; ஸ்டாலின் இரங்கல்

author img

By

Published : Nov 26, 2022, 4:01 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் இந்தி திணிப்பை எதிர்த்து இன்று காலை தீக்குளித்து உயிரிழந்தார். இதற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' என காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை.தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.