சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஜய் (17), அவரது நண்பர் திராவிட குமார் ஆகியோர் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று மதியம் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது இருவரும் ராட்சச அலையில் சிக்கி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மேலும், காணாமல்போன குமாரைத் தேடும்பணியில் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு, மீனவர்கள் உதவியுடன் கடலுக்குச் சென்று தீவிரமாகத் தேடியுள்ளனர்.
இதையடுத்து குமாரின் உடலை செப். 1ஆம் தேதி அன்று மீட்டனர். இளைஞர்கள் கடலுக்குள் இழுத்து செய்யப்பட்டதையடுத்து தீவிரமாகப் பணியாற்றி விரைவில் உடலை மீட்டு தீயணைப்புத் துறையினர், திருச்சினாங்குப்பம் மீனவர்களை வடக்கு மண்டல இணை ஆணையர் வி. பாலகிருஷ்ணன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மேலும் இளைஞர்களை மீட்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுத்த திருவொற்றியூர் சரக உதவி ஆணையர் ஆனந்தகுமார், திருவொற்றியூர் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் ஆகியோரைப் பாராட்டினார்.
இதையும் படிங்க: கோவையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 3பேர் கைது!