துபாயில் நடந்த 2019ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் சென்னையைச் சேர்ந்த அக்ஷரா ரெட்டி இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு உலக அழகி பட்டம் வென்றார். பட்டம் வென்று சொந்த ஊர் திரும்பிய அக்ஷராவிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா சார்பாக ஏதாவதொரு போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடை கனவு. அந்தக்கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஜப்பான், ரஷ்யா, ஜிம்பாப்வே ஆகிய 22 நாடுகளில் இருந்து அழகிகள் துபாயில் நடந்த அழகிப்போட்டியில் கலந்துகொண்டனர்.
அதில் நான் கலந்துகொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் போட்டியில் கலந்து கொள்வதற்கு தனியாக சென்றபோது அங்கிருந்த இந்தியர்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தனர்.
கடந்த காலத்தைப்போல் இல்லாமல் பெண்கள் தைரியமாக பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரச்னைகளை எதிர்த்துப் போராடக்கூடிய துணிச்சலை பெண்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும் - வைகோ நம்பிக்கை