ETV Bharat / state

கழிப்பிடம் சென்ற சிறுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது - Minor girl sexually assailed

சென்னை: அனகாபுத்தூரில் பொது கழிப்பிடத்திற்கு சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

arrested
arrested
author img

By

Published : Aug 27, 2020, 9:50 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் கழிவறை வசதி இல்லாத‌தால் இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பிடத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் பச்சையப்பன்(29) என்பவர் மதுபோதையில் சிறுமியை கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமைடந்த சிறுமி, பச்சையப்பன் முகத்தில் எச்சை துப்பியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் கன்னத்தில் பச்சையப்பன் அறைந்துள்ளார். இதில் சிறுமியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டு வீங்கியுள்ளது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர். பின்னர் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.