தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வருகிற மே 7ஆம் தேதி புதிய அரசின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர்களின் அறைகள், அமைச்சர்களுக்குச் சொந்தமான பொருள்களை காலி செய்யக்கூடிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.