ETV Bharat / state

முதலமைச்சருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள், நடிகர்கள்! - சேலம் சிலுவம்பாளையம்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள், நடிகர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து அவருடைய தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினர்.

முதலமைச்சருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள், நடிகர்கள்!

author img

By

Published : Oct 19, 2020, 2:27 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதனையொட்டி இன்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன், நீதியரசர் செல்வி வேலுமணி, ஆகியோர் தவுசாயம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி. சத்யா, விருகை வி.என். ரவி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி ஆகியோர் தவுசாயம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா, தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின், கூட்டுறவு, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும், பாஜக மாநில தலைவர் முருகன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் தவுசாயம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ரமேஷ் கண்ணா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பொருளாளர் சுவாமிநாதன், திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், இசையமைப்பாளர் தீனா ஆகியோர் நேரில் சென்று, தவுசாயம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.