ETV Bharat / state

‘புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கிடையாது’

author img

By

Published : Jan 27, 2020, 4:15 PM IST

Updated : Jan 27, 2020, 8:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளின் பணிகள் முடிந்து மாணவர் சேர்க்கை நடைபெற இன்னும் ஒரு வருடம் ஆகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister vijayabaskar byte about coronavirus
minister vijayabaskar byte about coronavirus

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை, அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் செந்தில் ராஜ் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் இந்திய அளவில் நடத்தப்பட்டது. இதில் நேபாளத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே எபோலா, நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப்போல் இதற்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என கூறிய விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் எந்தவித பதட்டமும் அடையத் தேவையில்லை என்றார். மத்திய அரசு கொரோனா வைரஸை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சித்த மருத்துவ முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதனை இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநரிடம் அளித்து ஆய்வு செய்து சரியாக இருந்தால் பரிந்துரைக்கப்படும் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

மேலும் அவர், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளின் பணிகள் முடிந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெற இன்னும் ஒரு வருடம் ஆகும் என்றார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி

Intro:9 புதிய மருத்துவக் கல்லூரிகளில்

மருத்துவக் கவுன்சில் அனுமதித்தால்
வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை

Body:சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் மட்டுமே வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் இந்திய அளவில் நடத்தப்பட்டது. கட்டத்தில் நேபாளத்தில் ஒருவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே எபோலோ,நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போல் இதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விமானநிலையங்கள், துறைமுகம் போன்றவற்றில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிச் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கரோனா வைரஸ் குறித்த எந்தவித பதட்டமும் பொதுமக்கள் அடைய தேவையில்லை. மத்திய அரசு கரோனா வைரஸ் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மூன்று பேர் கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் குழு வருகை புரிந்து ஆய்வு செய்தது. அந்தக் குழுவினர் தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சித்த மருத்துவ முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட இருந்தால் அதனை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரிடம் அளித்தால் ஆய்வுசெய்து சரியாக இருந்தால் பரிந்துரைக்கப்படும்.

தமிழகத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு, விரைவில் கட்டுமான பணிகளை துவக்க உள்ளோம்.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் பொழுது அகில இந்திய மருத்துவ கவுன்சில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்விற்கு பின்னர் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தால் சேர்க்கை நடைபெறும். ஆனால் அதேநேரத்தில் பணிகள் தொய்வின்றி விரைவாக நடைபெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவக் கல்விக் குழு அனுமதி அளித்தவுடன் மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசு ஏற்கனவே கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே உள்ளது என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Jan 27, 2020, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.