தமிழ்நாடு மகளிர் மேம்பட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களைச் சந்தை படுத்திட விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 மாவட்டங்களில் 120 சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டுள்ளன. 52 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், சுய உதவி குழுக்களுக்கு 9.18 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் தயாரிக்க பணி ஆணை வழங்கப்பட உள்ளது. பதினான்காவது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு, தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2015 - 16 ஆம் ஆண்டு முதல் 2019 - 20 ஆம் ஆண்டு வரையில் முதல் தவணைத் தொகையான 12 ஆயிரத்து 312 கோடியே 24 லட்ச ரூபாயில், இது வரை தமிழ்நாட்டிற்கு 8 ஆயிரத்து 536 கோடியே 96 லட்ச ரூபாய் அடிப்படை மானியமாக விடுவித்துள்ளது.
மேலும், நகர்ப்புற மற்றும் உள்ளாட்சிக்கு அடிப்படை மானிய தொகையாக 3,369 கோடி நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனறும் அவர் தெரிவித்தார்.