ETV Bharat / state

பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் புதிய சிக்னலை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

Pallavaram new signal inauguration: பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் மேம்பாலம் கீழ் புதிய தானியங்கி சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்.

பம்மல் சிக்னல் திறப்பு விழா
பம்மல் சிக்னல் திறப்பு விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 6:14 PM IST

பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் மேம்பாலம் கீழ் புதிய தானியங்கி சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்

சென்னை: பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் மேம்பாலப் பணிக்காக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்புகளை ஏற்படுத்தி சாலை மூடப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் வலதுபுறம் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் பான்ஸ் மேம்பாலம் வரை சென்று திரும்பி வந்தனர்.

அதேபோல், பம்மல் பகுதியில் உள்ள பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையிலும் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் வெகு தொலைவு சுற்றி வந்தனர். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை இருசக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்லூம் பெற்றோர்கள் உள்ளிட்ட மற்ற வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்படைந்தனர்.

மேலும், பல்லாவரம் பகுதிகளில் வியாபாரிகளும் கடுமையாக பாதிப்படைந்தனர். ஆனால், பல்லாவரம் மேம்பாலம் பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையிலும் சாலையில் நடுவே உள்ள தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. மேலும், அப்பகுதியில் இருக்கும் தடுப்புகளை அகற்றுவது குறித்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து, தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு, அங்கு இருந்த தடுப்புகளையும் அகற்றி, எளிதில் ஜி.எஸ்.டி சாலையை சென்றடையும் விதமாக வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. வடமாநில இளைஞர் கைது!

இதனை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தானியங்கி சிக்னலை இயக்கி வைத்து, பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என பலர் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து, இப்பகுதியில் இருந்த தடுப்புகளை அகற்றி, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் சுலபமாக செல்ல வழிவகை செய்துள்ளது.

மேலும், பல்லாவரத்தில் இருந்து பம்மல் வழியாக குன்றத்தூர் செல்லூம் சாலை விரிவாக்கம் பணிகளையும் விரைவுபடுத்தியுள்ளோம். விரைவில் நெரிசல் குறைக்க சாலை விரிவாக்கப்படும், கையகப்படுத்தப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் ஏற்பாடு செய்து தரப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பெய்த அதீத மழை - ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.