ETV Bharat / state

நான்கு ஆண்டுகளில் 340 துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் பெருமிதம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கடந்த நான்கு ஆண்டுகளில் 340 துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி
author img

By

Published : Mar 11, 2020, 3:44 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பெரியண்ணன், கருக்கக்குறிசியில் 110KV திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, “அங்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நீர், புறம்போக்கு நிலமாக உள்ளதால் மீண்டும் இடம் தேடி வருகிறோம். நிலம் கிடைத்தவுடன் விரைவில் தொடங்குவோம்.

இடம் கிடைப்பது மட்டுமே கடினமாக உள்ளது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடத்தை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்” என்றார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 340 துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என பெருமிதம் கொண்டார்.

இதையடுத்து, மயிலாப்பூர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் வருவதால் மிக சிரமமாக உள்ளது என மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நடராஜ் கூறினார்.

அதற்கு, “சென்னை முழுவதும் சீரான மின்சாரம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் 56 துணை மின் நிலையங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

அதற்கான பணிகள் நடந்துவருகின்றன. மயிலாப்பூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் மயிலாப்பூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைத்துத் தரப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.