ETV Bharat / state

போக்குவரத்து தொழிற்சங்க ஸ்டிரைக் நடந்தாலும் பிரச்சனை இல்லை..! பொங்கலுக்கு என்ன ஏற்பாடுகள்..! - பொங்கல் 2024

TN Government Bus strike: வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொங்கலுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 4:54 PM IST

Updated : Jan 8, 2024, 7:53 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பொங்கலுக்குப் பேருந்துகள் சகஜமாக இயங்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தென் மாவட்டங்களுக்குச் செல்கின்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தைத் தவிர வேறு எங்கிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படாது.

பொங்கல் முடிந்த பிறகு பிற ஊர்களில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்காக 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 830 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 459 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எனவே மொத்தம் பொங்கலுக்கு பிறகான நாட்களில் 17 ஆயிரத்து 589 பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்கான முன்பதிவு செய்வதற்கு கோயம்பேடு நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையமும் என 11 முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன. முன்பதிவு செய்துகொள்ள www.tnstc.in என்ற இணைய முகவரியிலே பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல டிஎன்எஸ்டிசியின் அதிகாரப்பூர்வ செயலியிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்வதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் புகார் தெரிவிப்பதற்கும் அல்லது பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக 94450 14450, 94450 14436 என இரண்டு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 18004256151 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 044 247 49002, 044 262 80445, 044 262 81611 ஆகிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். பேருந்து நிலையங்களுக்கு மக்கள் சிரமமின்றி செல்வதற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்.. அமைச்சர் சிவசங்கர் ரியாக்‌ஷன் என்ன?

Last Updated : Jan 8, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.