ETV Bharat / state

‘சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலை மாதம் திறக்கப்படும்’ - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : May 22, 2023, 10:52 PM IST

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கியபோது முந்தைய ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாததால் தான் பேருந்து நிலையம் திறக்க தாமதம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு நிறுத்தம் 5 ஏக்கர் நிலபரப்பில் ரூபாய் 29 கோடி செலவில் முடிச்சூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. அதனை 'சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு' மற்றும் 'குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்' ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதேபோல ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் முடிச்சூர் சீக்கனா ஏரி மேம்படுத்தும் பணிகள் மற்றும் ரூபாய் 1.50 கோடி செலவில் முடிச்சூர் ரங்கா குளம் மேம்படுத்தும் பணிகள், ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் பம்மல் ஈஸ்வரி நகரில் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள், ஆலந்தூரில் ரூபாய் 10 கோடி செலவில் சமுதாயநல கூடம் அமைக்கும் பணிகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகிற ஆம்னி பேருந்துகளுக்கு நிறுத்தம் அமைக்க வெளிவட்ட சாலை முடிச்சூரில் 5 ஏக்கர் நிலபரப்பில் ரூபாய் 29 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. அதனை ஆய்வு செய்தோம்.

மேம்பாலம் கீழ் பூங்கா அமைத்தல், பள்ளி சீரமைப்பு, பேருந்து நிலையம் சீரமைப்பு உள்ளிட்ட 28 இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். ரூபாய் 2 கோடி செலவில் சீக்கனா ஏரி மேம்படுத்துதல், ரூபாய் 1.5 கோடி செலவில் முடிச்சூர் ரங்கா குளம் மேம்படுத்துதல். பம்மல் ஈஸ்வரி நகரில் ரூபாய் 2 கோடி மதிப்பில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல். ஆலந்தூர் தொகுதியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தோம்.

3 மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் தொடங்கவுள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கியபோது முந்தைய ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாமலும், போக்குவரத்தை கணக்கில் கொள்ளாமல் தொடங்கப்பட்டதாலும் மற்றும் அடிப்படை தேவைகள் கணக்கிடப்படாமல் உள்ளதாலும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போதுமான வேலைகளை செய்து வருகிறோம். இதனால் தான் பேருந்து நிலையம் திறக்க தாமதம்.

அதனால் ஜூன் மாதம் பேருந்து நிலையம் திறப்பதற்கு தள்ளி போனாலும் ஜூலை மாதம் திறக்கப்படும். மேலும் வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், ஆம்னி பேருந்து நிறுத்ததிற்கு சம்மந்தம் இல்லை அதனால் ஜூலை மாத இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு விழா: அமைச்சர்களை உள்ளடக்கி தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.