ETV Bharat / state

ஓய்வு பெறாத அர்ச்சகர்கள் நீக்கப்படவில்லை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம் - chennai news in tamil

அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஓய்வு பெறாத எந்த அர்ச்சகர்களையும் நீக்கி, புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

minister-sekar-babu-says-only-retired-priests-removed-from-temple
ஓய்வு பெறாத அர்ச்சகர்கள் நீக்கப்படவில்லை- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
author img

By

Published : Aug 18, 2021, 10:02 PM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 47 திருக்கோயில்களில் உள்ள மூத்த அர்ச்சகர்கள், செயல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், கோயில்களில் இருக்கும் காலி பணியிடங்கள், அன்னை தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினர் அர்ச்சகர் திட்டம் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "யாருக்கும் எந்த பாதிப்பும் வராத படி இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்படி கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்களில் மட்டுமே புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

minister-sekar-babu-says-only-retired-priests-removed-from-temple
ஆலோசனைக் கூட்டம்

ஆகம விதிப்படி பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் நீக்கப்படவில்லை. ஓய்வு பெறாத அர்ச்சகர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதில்லை. அவ்வாறு நீக்கப்படால் எங்களிடம் தெரிவிக்கலாம்.

தற்போது, சில கோயில்களில் 70 வயது உடையவர்கள் பணியில் உள்ளனர். அடுத்த தலைமுறைக்கும் ஆன்மீகத்தை கொண்டு செல்லவே இளைஞர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஆண்டவருக்கு அடுத்தபடி ஆண்டவனுக்கு பூஜை செய்பவர்களை தான் நாங்கள் வணங்குகிறோம். உங்களுக்கு அப்படி எதுவும் செய்ய மாட்டோம்.

60 ஆண்டு ஓய்வுக்கு பிறகு பணி செய்பவர்கள் மட்டும் பணியை விட்டு செல்ல வேண்டுகோள் விடுகிறோம். இதை தவறு என்று சொன்னால் எப்படி திருக்கோயில்களை உயர்த்துவது? திருப்பதி போன்று நம் தமிழ்நாடு கோயில்கள் வளர வேண்டும். ஒரு காலத்தில் பழனிக்கு பக்தர்கள் வருகை திருப்பதியை விட அதிகமாக இருந்தது.

வணிக நோக்கில் திருக்கோயில்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.