ETV Bharat / state

பாஜக கொடுத்த அழுத்தத்தால்தான் கோயில்கள் திறப்பா? - சேகர்பாபு பதில் - bjp

அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறப்பு என்பது பாஜக கொடுத்த அழுத்தத்தால்தான் என்ற தகவல் உலாவரும் நிலையில், அது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உரிய பதிலை அளித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Oct 15, 2021, 1:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் கோயில்கள் திறக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து நாள்களும் கோயில்களைத் திறக்க பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

கோயில் திறக்க வலியுறுத்தி பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின்போது, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்னும் பத்து நாள்களுக்குள் கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க வேண்டும், இல்லையென்றால் அரசை ஸ்தம்பிக்கவைப்போம் என கெடுவிதித்திருந்தார்.

பொதுமக்களின் கோரிக்கை, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல்கள் இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக தமிழ்நாடு அரசு நேற்று (அக்.14) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வாரத்தின் அனைத்து நாள்களும் கோயில்கள் திறக்க அனுமதியளித்துள்ளது.

கோயில்கள் திறப்பு - மக்கள் வரவேற்பு

இதையடுத்து, வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர் 15) தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சாமி தரிசனம்செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வுசெய்தார்.

அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த அவர், "அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவித்துவருகிறார்கள். கரோனா தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்துவருகிறார்கள். சூழ்நிலைக்கேற்ப பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது குறித்து கோயில் நிர்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்" என்றார்.

அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம்!

கோயில்கள் திறக்க பாஜக கொடுத்த அழுத்தம்தான் காரணம் என அக்கட்சி கூறுவது குறித்த கேள்விக்கு, கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும். ஆய்வுக் கூட்டம் நடத்திய பிறகே கோயில்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அழுத்தத்திற்கு அடிபணியும் அரசு கிடையாது என்றார்.

இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறுவதற்குப் பதில் அளித்த சேகர்பாபு, கோயில்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது. மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், கனிந்த கனியைத் தடியால் அடித்து விழ வைப்பதுபோல் இருக்கிறது அவர்கள் கூறுவது என்று தெரிவித்தார்.

கே.பி. பார்க் கட்டடம்

மேலும், "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களில், கோயில் வருவாயிலிருந்து ஊதியம் வழங்குவதால், ஊதியம் பெறுபவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் கூறுவதால் இந்து சமய அறநிலையத் துறை கல்லூரிகளில் இந்துக்கள் மட்டும் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

கே.பி. பார்க் கட்டடம் உறுதியாக உள்ளது, பூச்சு வேலையில்தான் தவறு நடந்துள்ளது என ஆய்வறிக்கையில் வந்துள்ளது. எனினும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார் சேகர்பாபு.

இதையும் படிங்க: வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்க அரசு அனுமதி - அண்ணாமலை வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.