ETV Bharat / state

பாஜக அரசுடன் இணக்கமான முறையில் உறவு உள்ளது - ஆர்.பி. உதயக்குமார்

சென்னை: மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் பாஜக அரசுடன் இணக்கமான முறையில் உறவு உள்ளது என அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Minister press meet
R. B. Udhaya Kumar press meet
author img

By

Published : Jul 23, 2020, 8:32 PM IST

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில் 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது. மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னுதாரணமாக இருக்கிறார்.

நிவாரண நடவடிக்கையில் 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி தொடர்ந்து வழங்கப்படுகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றில் தீவிர விழிப்புணர்வு பரப்புரை அளிக்கப்பட்டு வந்தாலும், அதிகபட்சமாக நேற்று (ஜூலை 22) 60 ஆயிரத்து 111 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது, சென்னையில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது.

பிரதமர் அலுவலகத்தில் உயர்ந்த பொறுப்பை மதுரையில் பிறந்த அமுதா ஐஏஎஸ் பெற்று மதுரைக்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்து இருக்கிறார்.

சென்னைக்குப் பிறகு மதுரையில் பிளாஸ்மா வங்கியை தொடங்குவது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஆய்வு நடத்தியுள்ளார், விரைவில் தொடங்கப்படும்.

அதுமட்டுமின்றி நாள்பட்ட இணை நோய்கள் இருக்கும் காரணத்தால்தான் அதிகளவு இறப்பு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் அடிப்படையில் வேறு எந்த நோயின் காரணமாக இறந்தாலும் கரோனாவால் இறந்ததாக, இறப்புகளின் விவரம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் போரிடரை எதிர்கொள்ள நிதி தேவை இருக்கிறது என்றாலும், முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இன்னும் மத்திய அரசு கூடுதலாக நிதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக உறவு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அனைவரிடமும் உறவை மேம்படுத்துவத்தில் கெட்டிக்காரர்கள், மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் பாஜக அரசுடன் இணக்கமான முறையில் செல்பவர்கள் என்றார்.

குறிப்பாக கந்தசஷ்டி விவகாரத்தில் துரிதமாக செயலப்பட்டு, ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் கூட பாராட்டி உள்ளார்கள் என்ற, அதற்கு சான்று நடிகர் ரஜினி தமிழ்நாட்டு அரசை பாராட்டியதுதான் என்றும், எனவே பாஜக உடன் இணக்கமான உறவு உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பதிலளித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.