ETV Bharat / state

'கரோனாவால் தாயைக் கூட தள்ளி நிற்க சொல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது' - ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : May 23, 2020, 12:59 PM IST

மதுரை: கரோனா தொற்று காரணமாக பெற்ற தாயை கூட தள்ளி நிற்க சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, இது பாசத்தின் குறைவு அல்ல என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

minister R B Udhayakumar gives relief to auto drivers in Madurai

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா சாத்தங்குடி பகுதியில் வேலை இழந்து தவித்து வரும் 700 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறி தொகுப்பினை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அரசு அறிவித்துள்ள தகுந்த இடைவெளி விடப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பிடத்திற்கே சென்று அரிசி, காய்கறிகள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இதன் பின்னர் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் பேசியதாவது, "ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் ரூ. 2000 வழங்கி இருந்தாலும் தற்போது ஆட்டோ ஓட்டுவதற்கான அனுமதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த உலகில் எதை வேண்டுமானாலும் மீட்டெடுக்கலாம், ஆனால் உயிரை கடவுள் நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாது. அதனால்தான் உயிரை காப்பாற்றுகின்ற கடமைக்கும், உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தாலும், மக்களின் உயிரை 100 விழுக்காடு காப்பாற்றிய பின் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான வழிகளை செய்வோம். கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு நான்கு முறை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனால்தான் தற்போது திருமங்கலம் பகுதியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு பின்னர் ஐந்து பேருக்கு பரவி தற்போது தொற்று இல்லாத தாலுக்காவாக திருமங்கலம் இருந்து வருகிறது. கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பெற்ற தாயைக் கூட தள்ளி நில்லுங்கள் என்று கூறக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பாசத்தின், பண்பின் குறைவு அல்ல. உலக சுகாதார நிறுவனம் மத்திய சுகாதார நிறுவனம் நமக்கு அறிவுறுத்தி உள்ளது. நிகழ்ச்சிகள் நடத்தி நிவாரணப் பொருள் வழங்குவதற்கான காரணம் பொது மக்களிடையே தகுந்த இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே. எனவே, 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதி முதன்மையான தொகுதியாக இருக்க வேண்டும். அதற்கு திருமங்கலம் தொகுதி மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க... 'அலுவலர்களின் சீரிய முயற்சியால் மதுரையில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.