ETV Bharat / state

5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை...! - மாவட்டங்கள் பிரிப்பு

சென்னை: ஐந்து மாவட்டங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

minister-pandiyarajan-about-local-body-elections
author img

By

Published : Nov 16, 2019, 10:47 PM IST

சென்னை ஆவடி தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சுகாதார நிலையம் மற்றும் பருத்திப்பட்டு பகுதியில் ரூ. 1 கோடி செலவில் புதிதாக பூங்கா ஆகியவற்றை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார்.

சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் தலைவர்களுக்கான வெற்றிடம் எதுவும் இல்லை. கடந்த இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து தான் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு, மக்கள் நல்வாழ்வை மனதில் வைத்து மட்டுமே புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் எப்படி எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இதற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!

Intro:உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்Body:உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மிட்டனமல்லி,சோழம்பேடு, ஆகிய பகுதியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய சுகாதார நிலையம் மற்றும் பருத்தி பட்டில் புதிய பூங்கா கட்டப்பட்டது.இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.பின்னர் கட்டிடத்தில் உள்ள மருந்துகள் வைப்பு வரை மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை இருவரும் பார்வையிட்டனர்.இதே போன்று ஆவடி தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் 45 லட்சம் மதிப்பிட்டில் புதிய சுகாதார நிலையதை திறந்து வைத்தனர். இதுமட்டுமல்லாமல் ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 1 கோடி ரூபாய் செலவில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டு இன்று மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்.இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன்: வெற்றிடம் என்பது எங்களுக்கு எதுவும் இல்லை.கடந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் எப்படி எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை.உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் என கூறினார்.மேலும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தான் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு,மக்கள் நலவாழ்வை மனதில் வைத்து மட்டுமே புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.5 புதிய மாவட்டங்கள் பிரிவு என்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதற்கு அரசியல் காரணம் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.