செங்கல்பட்டு: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துறை அதிகாரிகளுடன் இன்று (ஏப்.29) திடீர் ஆய்வு செய்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூார் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் இறுதி கட்ட பணிகள் முடிந்து ஜூன் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது.
இந்நிலையில் இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பேருந்துகள்-62) நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் 60 மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் அமைந்துள்ளது.
அடித்தளம், தரைத்தளம், மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இரு சக்கரவாகனங்கள், 324 நான்கு சக்கரவாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரிதஉணவகங்கள், அவசரசிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலுாட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்கானிப்பு கேமராஅறை, 280 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 6 பயணிகள் மின் துக்கிகள், 2 சர்வீஸ் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளது. மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் 16 உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்பட்டு உள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் வருகிற ஜீன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: இது வீடா.. இல்ல சரக்கு குடோனா?.. பெட்டி பெட்டியாக பீர் பாட்டில்கள் - அடித்து நொறுக்கிய பெண்கள்