சென்னை: தாம்பரம் விமானப்படை வளாகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முப்படையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான 7ஆவது மாநாடு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் பங்கேற்று ராணுவத்தில் சாதனை நிகழ்த்திய மூத்த முப்படை வீரா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
இதில் 2,500 க்கும் மேற்பட்ட முப்படையில் பணியாற்றிய அதிகாரிகள், படைப்பிரிவினர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் குறித்தும், அதனை பெறுவது குறித்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களிடம் குறைகளை ஒரே இடத்தில் போக்குவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அஜய் பட் ர், “சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய ராணுவத்தின் பலம் படிப்படியாக அதிகரித்துள்ளது. அதோடு திறனை அதிகரித்தும் மிகச் சிறப்பாக விளங்குகிறது. ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவத்தினா் நலனில் மட்டுமல்லாமல், அவா்களது குடும்ப நலனிலும் அக்கறை செலுத்துவதுடன், ஆதரவளிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்ப ராணுவ ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன், உற்பத்தி செய்யப்படும் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: இதையெல்லாம் கூகுளில் அதிகமாக தேடினால் போலீஸ் வரும்...!