ETV Bharat / state

அண்ணாமலைக்கு விஜயபாஸ்கர் வாழ்த்து

author img

By

Published : Oct 2, 2020, 4:06 PM IST

கரூர்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸகர் தனது அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற பேரணியின்போது, கரூர் பேருந்து நிலையம் அருகே பாஜக அண்ணாமலையைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

mr vijayabaskar wishes bjp annamalai
பாஜக அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் எம்ஆர்வி அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதையொட்டி கரூர் நகர் பகுதியில் உள்ள திருவள்ளூர் மைதானத்திலிருந்து, மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபம்வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் நடைபெற்றது.

அப்போது, கரூர் பேருந்து நிலையம் அருகே பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தவழியாக வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வந்தபோது, அண்ணாமலை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு அவரும் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

mr vijayabaskar wishes bjp annamalai
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாஜக அண்ணாமலை

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜகவினர் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய குப்பைகளை சுத்தம் செய்தனர். இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை அண்ணாமலை வழங்கினார். நிகழ்வில் பேசிய அவர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரும் முதுகெலும்புடன் நிற்கவேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. கரூர் தொழில் நகரம் என்பதால், காற்றை மாசுப்படுத்தாமல் தொழிலை நடத்தவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்த எம்.பி. ஜோதிமணி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.