சென்னை: ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இதில் பங்கேற்று பதக்கங்களை வெல்ல உலகம் முழுவதிலுமிருந்து 11 ஆயிரம் தடகள வீரர்கள், பல்வேறு விளையாட்டு வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்புடையவர்கள் பலருக்கும் கரோனா தொற்று இருப்பது தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற இந்தியத் தடகள அணியினரின் நிலை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், ’கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளது. தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்களைச் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள தமிழ்நாட்டு வீரர்கள், பாதுகாப்புடன் உள்ளனர். அவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏதும் இல்லை’ என்றார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: இதுவரை 58 பேருக்கு கரோனா தொற்று