ETV Bharat / state

நீட் தேர்வு - பெற்றோர் அழுத்தம் தருவதாக மாணவர்கள் வேதனை

author img

By

Published : Nov 6, 2021, 3:31 PM IST

பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக நீட்தேர்வு கவுன்சிலிங் போது சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் தெரிவித்துள்ளது மிகுந்த வருத்தம் அளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

masu
masu

சென்னை: வீடு தேடி தடுப்பூசி' திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் சேலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தை அளிக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரை முதலமைச்சர் சந்தித்த போதும், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை சந்தித்த போதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம்.

இதுவரை ஒன்றிய அரசு நீட் தேர்வு பிரச்னையில் முழு தீர்வு காணவில்லை. தமிழ்நாட்டில் 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு எழுதியவுடன் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் 333 மன நல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது, இதுவரை 21,756 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பேசிய போது 2 ஆயிரம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மீண்டும் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு அழுத்தம் தரும் பெற்றோர்கள்

இந்நிலையில் மீண்டும் ஒரு மரணம் மன வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கண்டிப்பாக இது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் உயிருக்கு நீங்கள் தான் முழு உத்தரவாதம். அவர்களுக்கு அழுத்தம் தராமல் இருப்பது பெற்றோர்களின் கடமை.

கவுன்சிலிங்கின் போது பெற்றோர்கள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக 5 ஆயிரம் மாணவர்கள் கூறி இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளும் பெற்றோர்களை நினைத்து பார்த்து, வாழ்ந்து, சாதித்து காட்ட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், குடும்ப நல நீதிமன்றம் துணை நிற்காது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.