ETV Bharat / state

ஒரே இடத்தில் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசிகள் வீணாகும் என்பதனால் முகாம்கள் அமைத்து ஒரே இடத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒரே இடத்தில் தடுப்பூசி
ஒரே இடத்தில் தடுப்பூசி
author img

By

Published : Oct 30, 2021, 11:00 PM IST

சென்னை: மாதவரத்தில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரசாந்த் குழுமத்தின் சார்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு பகுதியில் பெண்களுக்கு கரு உருவாகும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு இதுவரை சுமார் 50 ஆயிரம் பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எக்மோ வசதியுடன் குழந்தைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட அதிநவீன வசதிகளை கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக இந்த மருத்துவமனை வடசென்னை பகுதி மக்களுக்காக செயல்படுத்தப்பட உள்ளது.

அடையாறு, பல்லாவரம், தாம்பரம் பகுதிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் ஆறரை மணி வரை 14 லட்சத்து 92 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இன்று 25 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் என எதிர்பார்த்த நிலையில் 16 லட்சம் வரை மட்டுமே போடப்பட்டது.

பல இடங்களில் கடும் மழை பொழிவதால் ஊசி போட்ட உடன் காய்ச்சல் வரும் போன்ற தவறான எண்ணங்களால் தடுப்பூசி போடுவது குறைந்துள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசிகள் வீணாகும் என்பதனால் முகாம்கள் அமைத்து ஒரே இடத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்? - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.