ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையம் அமைக்க திட்டம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டிற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் கிடைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்ப சுகாதார மையம் அமைக்க திட்டம்

author img

By

Published : Oct 11, 2022, 5:12 PM IST

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருந்து இருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 46 சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார இயக்குநர்கள், இனை இயக்குநர்கள், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குநர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதற்கு முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முதல் தவணை 96% விழுக்காடு இரண்டாம் தவணை 91% விழுக்காடு செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அக்டோபர் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாகச் செலுத்த மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் கூடுதலாகக் காலம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு சுகாதாரத்துறை கோரிக்கை வைத்து இருந்தது.

அதனால் கையிருப்பில் வைத்துள்ளதைக் கொண்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. விரைவில் அவற்றைச் செலுத்தி முடிக்க வேண்டுமெனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குப் புதிதாக 25 ஆரம்பச் சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை எங்கு துவங்குவது என்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 708 நகர்ப்புற சமூகநல மையம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த 20 நாட்களில் 13,178 காய்ச்சல் முகாம்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு உள்ளது எனவும், இந்த முகாம்களில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 351 நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 32 மருந்து சேமிப்பு கிடங்குகளிலிருந்து இவை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 6 மருந்து கிடங்குகளை அமைக்க வேண்டும் என தலா ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருந்துகள் இருப்பு தன்மை குறித்து கேட்டறியப்பட உள்ளன, மருந்து கிடங்குகளிலிருந்து மருந்துகளை வாங்கி வருவதில் உள்ள கால தாமதம் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன எனக் கூறினார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தை விவகாரம்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இரட்டை ஆண்குழந்தைகள் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும், டிஎம்எஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருமுட்டை மற்றும் வாடகைத் தாய் விதிமுறைகள் ஏதேனும் என்று அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள், அதன் பின் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கம் கேட்க அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.