ETV Bharat / state

அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - chennai latest news

சென்னை: அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல, மக்களைக் காப்பது தான் நோக்கம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல

author img

By

Published : May 18, 2021, 11:08 PM IST

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் பேருந்து, செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மருந்து பொருட்கள் ஆகியவற்றை கரோனா நிவாரணமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றது. இந்திய செஞ்சிலுவை சங்கம் ரூ.2.5 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. ஆக்ஸிஜன் வசதி கொண்ட 3 பேருந்துகளை அடையார் இன்னர் வீல் சங்கம் வழங்கியுள்ளது.

இன்று (மே.18) காலை திண்டிவனத்தில் மருத்துவர் ராமனுக்கு போலியான ரெம்டெசிவிர் மருந்தை அளித்ததால் உயிரிழந்தார் எனப் புகார் அளிக்கப்பட்டது. ஆய்வு மேற்கொண்டதில் அவருக்கு வழங்கப்பட்ட மருந்து போலி என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருந்து வழங்கப்பட்ட திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் தற்போது ஆய்வு மேற்கொண்டதில் கரோனா சிகிச்சையை சரியாக மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஆக்ஸிஜன் வழங்குவது தவறு. சென்னையில் கார் ஆம்பூலன்ஸ் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என பிரதமர் பாராட்டினார். தொற்று எண்ணிக்கை குறைவதற்கு ஒரே வழி ஊரடங்கு தான். ஊரடங்கால் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது.

'அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல'

தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படும். 78 லட்சம் தடுப்பூசிகள் வந்ததில் 68 லட்சம் போடப்பட்டுள்ளது. தற்போது செய்யப்பட்டு வரும் கட்டமைப்புகள் 3ஆவது அலையை எதிர்கொள்ள சேர்த்தே செய்யப்படுகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்துவது மட்டுமே" என்றார்.

அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "இது குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல. கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பதே நோக்கமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சையில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.