ETV Bharat / state

செப்.23ல் தென் மாநிலங்களுக்கான 'உறுப்பு தான மாநாடு' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

Organ Donation Convention for Southern States:தென் மாநிலங்களுக்கான உறுப்பு தான மாநாடு வரும் 23ஆம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 6:15 PM IST

சென்னை: உறுப்பு மாற்று தானம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் தென் மாநிலங்களுக்கான விழிப்புணர்வு மாநாடு மற்றும் உறுப்பு மாற்று காெடையாளர் தினம் செப்டம்பர் 23ஆம் தேதி (organ Donation Convention for Southern States in Chennai) சென்னையில் நடைபெறுகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சார்ந்த அஜித்குமார் (27) என்பவருக்கு 'இருதய மாற்று அறுவை சிகிச்சை' வெற்றிகரமாக செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்ப உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை நேரில் நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடர்ந்து 11வது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடி பகுதியில் இருந்து அஜித்குமார் என்ற 27 வயது நபர் வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அங்கே அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் அங்கு பணியிலிருந்து இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். திரும்ப வந்தவர் கடந்த ஜீலை திங்கள் 3ஆம் தேதி ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்தவர், இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததால் அவரிடத்திடமிருந்து இருதயம் பெற்று இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு 22ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, இன்று அவர் இல்லம் திரும்புகிறார். இவருடன் சேர்த்து 11வது இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் இதுவரை நடைபெற்று இருக்கின்றது.

இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தினந்தோறும் வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 500-லிருந்து 700 வரை என இருந்த எண்ணிக்கை இன்றைக்கு 2000 வரை உயர்ந்திருக்கிறது. 4 மடங்கு கூடுதலாக இன்றைக்கு பொதுமக்கள் பயன்பெற இம்மருத்துவமனையை நாடி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் வரை உள்நோயாளிகளின் எண்ணிக்கை 250 என்கின்ற எண்ணிக்கையில் இருந்தது.

தற்போது 500 வரை உள்நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக ஆகியுள்ளது. அதேபோல், இருதயத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால், 2000 புறநோயாளிகளில் ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்டவர்களில் இருதயத்துறை சிகிச்சை பிரிவிற்கு மட்டுமே சிகிச்சை வருகின்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 320-க்கும் அதிகமான ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

அறுவை சிகிச்சையில்லாத மூளை ரத்தநாளப் பிரச்னைகளுக்கான சிகிச்சை: மிகவும் சிக்கலான உயிர்காக்கும் சிகிச்சைகள் செய்யும் International nuero radiology பிரிவும் இம்மருத்துவமனையில் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. அதேபோல், Craniotomy செய்யாமலேயே நுண்துளை மூலமாக மூளையில் உள்ள இரத்தம் நாள பிரச்சினைகளை சரிசெய்யும் முறை இம்மருத்துவமனையில் கையாளப்பட்டு வருகிறது. இதுவரை 7000-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் இதன்மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.34 கோடி செலவில் 'ரோபோடிக்' புற்றுநோய் உபகரணம்: Moternal Screening Analysis என்னும் அதிநவீன கருவியின் மூலம் கருவுற்ற ஓரிரு வாரங்களுக்குள்ளேயே குழந்தைகளின் வளர்ச்சித் தன்மைக் குறித்து அறிந்துக் கொள்வதற்கு அந்தக் கருவி இங்கே செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக அந்த இயக்கம் என்பது இந்த மருத்துவமனையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத புதிய வசதி உள்ளது. ரூ.34 கோடி செலவில் 'ரோபோடிக்' புற்றுநோய் உபகரணம் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அது தொடங்கிய நாள்முதல் இன்று வரை 170 அறுவை சிகிச்சைகள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் இல்லாமல் ரோபோடிக் எக்குப்மென்ட் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இது பெரிய அளவில் அவர்களுக்கு பயன் தந்திருக்கிறது.

அந்தவகையில் இம்மருத்துவமனை பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. அதேபோல், இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை Pain Medicine மருத்துவ சேவை வசதி இங்கு இருக்கின்றது. அதேபோல், மிகவும் அரிதான வசதிகளுள் ஒன்றான Nuclear Medicine, Sports Medicine போன்ற துறைகளும் இருக்கின்றது. விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, அவர்களுக்கென்ற பிரத்யேக துறை ஒன்றும், இங்கு பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் DRNB - Interventional Radiology, Neurology, Vascular Surgery, DNB-Radio therapy, Fellowship in pain Medicine ஆரம்பிக்கப்பட்டு Post Graduate Institute ஆகவும் உருவெடுத்திருக்கிறது.

மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை; தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை தானங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு இன்று இந்தியாவில் முதலிடத்தில், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் 'மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை' திட்டத்தினை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். இந்த மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு மாற்று சிகிச்சைகள், உறுப்பு தானம் பெறுவது என்பது அன்று முதல் விழிப்புணர்வு பெற தொடங்கியது. இந்தியா முழுவதிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை என்பது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் Transplant Hospital என்று சொல்லக்கூடிய வகையில், அரசு மருத்துவமனைகள் இருப்பது 13 இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, 128 மருத்துவமனைகள் அனுமதி பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் 27 அரசு மருத்துவமனைகளில் NTORC (Non Trnasplant Organ Retrieval Centres) வேண்டும் என்கின்ற கோரிக்கையினை வைத்தார்கள். உடனடியாக, அவர்களுக்கு அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு 27 புதிய அரசு மருத்துவமனைகளுக்கு Non Transplant Organ Equipment Centers என்று சொல்லக்கூடிய உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும்தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 22 லட்சம் ரூபாய் வரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 2014 முதல் தற்போது வரை மட்டும் 376 நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். மேலும், செப்டம்பர் 23ஆம் தேதி 'உறுப்பு தான கொடை தினம்' மிகச் சிறந்த வகையில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. NOTTO (NATIONAL ORGAN AND TISSUE TRANSPLANTATION ORGANISATION) என்கிற தேசிய உறுப்பு தான திட்ட டெல்லி அமைப்பு இந்திய மாநிலங்களில் 5 பகுதிகளாக பிரித்திருக்கிறது.

மேலும் ROTTO SOUTH என்பது தமிழ்நாட்டை மையமாக கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை நேரில் சென்று ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுக் கொண்டோம். தமிழகத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி தினத்தை தமிழக உறுப்பு தான கொடை நாளாகக் கொண்டாடி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தை தலைமையகமாகக் கொண்ட NOTTO SOUTH உறுப்பினர்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் பங்கேற்க அழைத்துள்ளோம். இந்நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பான முறையில் நடத்திட திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், 'பன்றி காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகரிக்கவில்லை என்றும் மருத்துவமனைகளில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

இதையும் படிங்க: "உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு திமுக அழிய போகிறது என்பதை காட்டுகிறது" -ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.