சென்னை: தமிழ்நாட்டில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அவர்கள் அறிக்கை#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @KKSSRR_DMK @mp_saminathan @tnsdma pic.twitter.com/6Y3USvVo7I
— TN DIPR (@TNDIPRNEWS) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அவர்கள் அறிக்கை#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @KKSSRR_DMK @mp_saminathan @tnsdma pic.twitter.com/6Y3USvVo7I
— TN DIPR (@TNDIPRNEWS) January 5, 2024தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அவர்கள் அறிக்கை#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @KKSSRR_DMK @mp_saminathan @tnsdma pic.twitter.com/6Y3USvVo7I
— TN DIPR (@TNDIPRNEWS) January 5, 2024
அதில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிகக் கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.5) வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று (ஜன.5) தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஜன.06) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜன.07) தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 7 அன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மீனவர்களுக்குப் பின்வருமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது: இன்று (ஜன.5) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாளை (ஜன.06) மற்றும் நாளை மறுநாள் (ஜன.07) அன்று தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், மேற்சொன்ன பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசரக் கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!