ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்படும்- - அமைச்சர் கேகேஎஸ்ஆர். ராமச்சந்திரன் - Minister kkssr ramachandran speech in assembly

தமிழ்நாடு அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றி, அங்கு அரசு கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதிலளித்தார்.

தமிழ்நாடு அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றப்படும் - அமைச்சர் minister-kkssr-ramachandran-says-steps-will-be-taken-to-remove-buildings-occupying-lands-of-government-of-tamil-nadu
தமிழ்நாடு அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றப்படும் - அமைச்சர்minister-kkssr-ramachandran-says-steps-will-be-taken-to-remove-buildings-occupying-lands-of-government-of-tamil-nadu
author img

By

Published : Apr 12, 2022, 1:52 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் ஐந்தாவது நாளான இன்று (ஏப்.12) நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலுரை நிகழ்த்துகிறார்.

இதனிடையே, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தாம்பரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, நகர் புறங்களில் அரசு நிலங்கள் போலியாக பட்டாக்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் நகராட்சி அலுவலங்கள், மின்வாரி அலுவலங்கள், ரேசன் கடைகள் குடிநீர் தேக்க தொட்டி கட்ட இடம் கிடைப்பதில்லை என்றும், எனவே அரசு நிலங்களை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

தாம்பரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் ஆர் ராஜா

இதனையடுத்து, இதற்குப் பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் போலி பட்டாக்கள் உள்ளன.

பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக, அரசு கவனத்திற்கு வந்த நிலையில் 92 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இது போல வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அரசு கவனத்திற்குக் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்டெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நகர் பகுதியில் இருக்கக்கூடிய இடங்களில் பொதுமக்கள் பயன் தரக்கூடிய வகையில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் பதிலளித்தார்.

இதையும் படிங்க: 'பிரதமராகவே செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்' - ஆளூர் ஷா நவாஸ் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.