தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் , பென்ஜமின், பாண்டியராஜன் , தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் வளர்மதி தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "உலகம் முழுவது உள்ள தமிழர்களுக்காக பாடுபட்டவர்; தமிழை உலகமெங்கும் பரப்ப அயராது உழைத்தவர் சி.பா. ஆதித்தனார். சி.பா. ஆதித்தனார் எளிய நடையில் தமிழை அனைவரும் எளிதாக கற்று தெரிந்துக் கொள்ளும் வகையில் தனது பத்திரிக்கை மூலம் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர்.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஒவ்வொரு கட்சியும் செயற்குழு, பொதுக்குழு கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் முதற்கட்டமாக நாளை அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் அவைத் தலைவர் மதுசூதனனை நலம் விசாரிக்கவே துணை முதலமைச்சர் நேரில் சந்தித்தார்.
மற்றபடி இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை. மேலும், ஆட்சி ஒருவருக்கு, கட்சி ஒருவருக்கு என்பதெல்லாம் கொள்கை முடிவு என்பதால் அதுகுறித்து கட்சி முடிவு செய்யும்" என்றார்.
இதையும் படிங்க: திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு - கனிமொழியிடம் விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்