ETV Bharat / state

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் - அமைச்சர் ஜெயக்குமார் - fishermen minister jeyakkumar

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

jeyakkumar
jeyakkumar
author img

By

Published : Aug 28, 2020, 5:31 PM IST

சென்னை ராயபுரத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அப்போது, பொருள்களை வழங்குவதற்காக காத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு தகுந்த விலகல் காற்றில் பறக்கவிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், ராயபுரத்தில் உள்ள வட்டங்களில் உயிரை துச்சமென மதித்து சிறப்பாக பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் பணப்பரிசும் மளிகை பொருள்களும் நலதிட்டமாக வழங்கப்பட்டது. கரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்படுவது மூலம் இந்நிலையை உருவாக்கலாம்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அரசு வருமானத்தில் 70 ஆயிரம் கோடி வரை மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக வரலாற்றில் இதுவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கருத்தையே முதலமைச்சரும் கூறியுள்ளார்.

காற்றில் பறந்த தனிமனித இடைவெளி
காற்றில் பறந்த தனிமனித இடைவெளி

தேர்தல் நேரத்தின் போது தான் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இருக்கும் என்பது பற்றி தெரிய வரும். இரண்டாவது தலைநகரம் குறித்து அரசு தான் முடிவு செய்யும்" என்றார்.

இதையும் படிங்க: ஜன்தன் பயனாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் வழங்கும் மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.