ராஜாஜியின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், க. பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘குடியுரிமை சட்டத்தால் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று அமித் ஷா உறுதியளித்த பின்னரே அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய விஷயங்களை அதிமுக ஆதரித்துவருகிறது.
திமுக ஒரு குழப்பமான கட்சி. நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதனை ஏற்பதாக கூறிய ஸ்டாலின், தற்போது மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் செய்துவருகிறார். முதலமைச்சர் கனவோடுதான் ஸ்டாலின் உள்ளார். எனவே, அவர் நித்தியானந்தா போன்று ஒரு தனித்தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதலமைச்சர் ஆகலாமே தவிர தமிழ்நாட்டிற்கு ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது’ என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: சொந்த நாட்டை நிறுவினாரா நித்யானந்தா? வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில்.!