ETV Bharat / state

’ராதாரவி மீது மட்டும் உடனடி நடவடிக்கை’ - ஆ.ராசா விவகாரம் குறித்து ஜெயக்குமார் - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : ராயபுரம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார், “பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு பேசிய ராதாரவி மீது உடனடி நடவடிக்கை எடுத்த திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Mar 31, 2021, 2:25 PM IST

சென்னை, ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், பெரிய பாளையத்தம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டார். அதன் பின்னர் மூல கொத்தளம் பகுதியில் சைக்கிள் ரிக்ஷாவில் நின்றபடி பரப்புரையில் ஈடுபட்டார். மேலும் வாக்கு சேகரிப்பின் நடுவே ஒரு குழந்தைக்கு ராமச்சந்திரன் எனப் பெயர் சூட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் திமுகவினர் அவமானப்படுத்தினர். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவது திமுகவின் கலாச்சாரம். திமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளின் பேச்சை தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்துமே பெண்களுக்கு எதிரான இழிவுப் பேச்சு என்பது தெரியவரும்.

ராயபுரம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்

பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு பேசிய ராதாரவி மீது திமுகவின் தலைமை உடனே நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதாது ஏன்? ராயபுரம் தொகுதியில் திமுக வைப்புத் தொகையை கூட திரும்ப பெறாது. வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து பேச முடியாது” என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.