சென்னை ராயபுரத்தில் ஏஜே காலணி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதியதாக ஸ்ரீ சேனி அம்மன் கூட்டுறவு சங்கத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ”திமுகவின் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் எட்டு வழிச்சாலை குறித்து ஆதரவாகப் பேசியுள்ளார். யாரும் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
நீட் பிரச்னைக்கு 2010ல் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் சட்டம்தான் காரணம். மக்களவைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் இரண்டு லட்சம் கோடி ஆகும் ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த பட்ஜெட்டே 1.25 கோடிதான்” என்றார்.
மேலும், வைகோ குறித்து பேசிய அவர், ’திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோ தற்போது ஒரு எம்பி சீட்டுக்காக திமுகவிற்கு ஜால்ரா அடிக்கக்கூடாது’ என விமர்சித்தார்.