ETV Bharat / state

Siruvani River: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. சிறுவாணி இடையே கேரள அரசின் அணை குறித்து பேரவையில் அமைச்சர் பதில்!

ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக, சிறுவாணி ஆறு இடையே கேரள அரசு அணை கட்டும் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Etv Impact story
செய்தி
author img

By

Published : Apr 21, 2023, 12:43 PM IST

Updated : Apr 21, 2023, 2:51 PM IST

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் பிரத்யேக செய்தியை நேற்று(ஏப்.20) வெளியிட்டிருந்தது. அதில், "சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

மேலும் இரண்டு இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் கோவை பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளின் கண்டனத்தையும், வேதனையையும் இந்த பிரத்யேக செய்தியில் ஈடிவி பாரத் பதிவு செய்திருந்தது.

சிறுவாணி இடையே தடுப்பணை குறித்த செய்தி - சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!

ஈடிவி பாரத்(Etv Bharat) செய்தியின் எதிரொலியாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிறுவாணி அணை விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சிறுவாணி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், இதனை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது குடிநீர் ஆதார பிரச்சனை என்றும், சிறுவாணியின் குறுக்கே அணை கட்டினால் தண்ணீர் வராது. அதனால் கேரள அரசு அணை கட்டப்பட்டால் தடுத்து நிறுத்த வேண்டும்- சிறுவாணிதான் கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த செய்தி தங்களுக்கும் வந்திருப்பதாகவும், கேரளா அரசு 70 மில்லியன் கன அடி வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vengaivayal Case: இறுதி கட்டத்தை நெருங்கிய வேங்கைவயல் வழக்கு.. காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை!

Last Updated : Apr 21, 2023, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.