விருதுநகர் : கரோனா இரண்டாம் அலை பாதிப்பில் ஆக்ஸிஜன் முக்கிய தேவையாக இருந்ததன் அடிப்படையில் ஒன்றிய அரசு ஒரு மாவட்டத்தில் குறைந்தது இரண்டு இடங்களிலாவது ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை தொடங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ 1.86 கோடியில் பி.எம் கேர்ஸ் நிதியின் மூலம் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகளை
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது.
இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தின் திறப்பு விழா இன்று (செப்.05) நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இந்த புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க : சம்பா சாகுபடி - வாய்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை