ETV Bharat / state

'கனமழை சேத அறிக்கைக்குப் பின்னரே மீனவர்களுக்கு இழப்பீடு' - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

கனமழை சேத அறிக்கைக்குப் பின்னரே மீனவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான காணொலி
author img

By

Published : Nov 18, 2021, 10:18 AM IST

சென்னை: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட படகுகளின் சேதங்கள் குறித்து மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறிநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வுமேற்கொண்டனர்.

அப்போது சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்ட அமைச்சர்கள் பாதிப்பு குறித்து மீன்வளத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

செய்தியாளர்களிடத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

அப்போது செய்தியாளரைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “கனமழையால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்பட அனைத்து மீன்பிடி துறைமுகங்களின் சேதங்களையும் ஆய்வுசெய்யுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 17) காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வுமேற்கொண்டுள்ளோம். மேலும் படகு சேத விவரங்கள் உள்பட அனைத்துச் சேதங்களையும் அறிக்கையாகத் தயார்செய்து முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்வோம்.

சேத அறிக்கைக்குப் பின்னரே மீனவர்களுக்கான இழப்பீடு குறித்து ஸ்டாலின் தெரிவிப்பார்” என்றார். ஆய்வின்போது மீன்வளத் துறை இயக்குநர் பழனிச்சாமி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 2 நாட்களுக்கு உணவுப்பொருட்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.