ETV Bharat / state

பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும்கண்டனம் - பால் விலை உயர்வு

பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 4, 2022, 8:48 PM IST

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, "ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15 வரை உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன் வந்த தமிழ்நாடு அரசுக்கும், நடைமுறைப்படுத்த உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், பரிந்துரைத்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசருக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் லிட்டருக்கு ரூ.15 வரை பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு வெறும் ரூ.3 உயர்த்தி வழங்கியிருப்பது என்பது யானை பசிக்கு சோளப்பொறியை கொடுத்தது போல் இருக்கிறது.

கொள்முதல் குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.12 ஆவது உயர்த்தி வழங்க முன் வர வேண்டும். ஆரஞ்சு பால் வணிக ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தவறான தகவலை கூறியும், அரசு அறிவித்துள்ள பால் கொள்முதலை காரணமாக கொண்டும், விலை உயர்வை காரணமாக கொண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12, "டீமேட்" என்று சொல்லப்படும் சிவப்பு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை விலையை லிட்டருக்கு ரூ.16, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் நடைமுறையில் உள்ள "ஆவின் கோல்டு" பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தும் தமிழ்நாடு அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், பொதுமக்களை கடுமையாகப்பாதிக்கும் ஆவின் ஆரஞ்சு, டீமேட், கோல்டு பாலின் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். தற்போது கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் பொது வணிகத்திற்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துகின்ற அறிவிப்பு என்பது ஆவினில் மிகப்பெரிய அளவில் ஊழல், முறைகேடுகள் நடக்கவே வழிவகுக்கும் என்பதையும், பால் முகவர்களுக்கான பால் விற்பனை கமிஷன் தொகை உயர்த்தப்படாததால் அது ஆவின் பால் விற்பனையை கடுமையாகப்பாதிக்கும் என்பதை முதலமைச்சரின் தனிக்கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

ஏனெனில் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆரஞ்சு நிறப் பால் பாக்கெட்டின் விற்பனை விலையை உயர்த்தி விட்டு, பால் முகவர்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் வழங்கவில்லை என்றால் பால் முகவர்கள் அனைவரும் ஆரஞ்சு நிறப்பால் பாக்கெட்டுகளின் விற்பனையைப் புறக்கணிக்கும் சூழல் ஏற்படும். மேலும் இந்த விற்பனை விலை உயர்வு என்பது மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அமல்படுத்தப்படாததால் பொது வணிகம், மாதாந்திர அட்டை இரண்டுக்கும் இடையே லிட்டருக்கு ரூ.14 வித்தியாசம் வருவதால் அதன் பலனை ஆவின் மண்டல அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் பயன்படுத்திக்கொண்டு மாதாந்திர அட்டை மூலம் கள்ளச் சந்தையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் சூழல் உருவாகும்.

அதுமட்டுமின்றி பொது வணிகத்திற்கும், மாதாந்திர அட்டைக்கும் லிட்டருக்கு ரூ.14 வித்தியாசம் இருப்பதால் தற்போது ஆவினில் உள்ள மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் மண்டல அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, மாதாந்திர அட்டைகளை மொத்தமாக வாங்கி, அதன் மூலம் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து அதிக லாபம் ஈட்டத்தொடங்கி விடுவர். ஒரு சில சில்லறை வணிகர்களும், முகவர்களும் கூட அது போன்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். இதனால், ஆவினுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இதைக்கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முன்னுதாரணமாக கொண்டு தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். எனவே, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ. 12 ரூபாயாவது உயர்த்தி வழங்கவும், முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தற்போதுள்ள நிலையில் இருந்து நியாயமான அளவில் உயர்த்தி வழங்கிடவும் ஆவண செய்திட வேண்டும் என முதலமைச்சரை பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: துரோக மாடல் ஆட்சி: ஆவின் பால் விலை உயர்வைக்கண்டித்து ஓபிஎஸ் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.