ETV Bharat / state

'இவ்வளவு நாள் பொறுமையா இருந்துட்டோம்; எங்கள எங்க ஊருக்கு அனுப்புங்க' - புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனைக் குரல்

"பல நாள்களாக ஒரே இடத்தில் முடங்கியிருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டோம், தற்போது வேலையில்லாமல் பொருளாதார சிக்கல்களால் தவித்து வருகிறோம். நாங்கள் வீட்டுக்குச் செல்ல உதவுங்கள்" என்பதே தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனைக் குரலாக உள்ளது.

சென்னைச் செய்திகள்  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்  migrant workers protes  migrant workers documentry  migrant workers in india  migrant workers struggle
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புலம்பல்
author img

By

Published : May 5, 2020, 1:12 PM IST

தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது 40 நாள்களை நெருங்கிவிட்டது.

இந்த நிலையில் முகாம்களில் வெளியுலக வாசமின்றி, சொந்தபந்தங்களில் அரவணைப்பின்றி இத்தனை நாள்கள் தவித்த வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி, கையில் பணமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மே 17 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கிலும் போக்குவரத்துக்கு தளர்வு அளிக்கப்படாவிட்டாலும், பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வழிபாட்டு யாத்திரைக்குச் சென்றவர்கள், மாணவர்கள் ஆகியோரை சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்களது மாநிலத்துக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

அறிவிப்பைத் தொடர்ந்து தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில கூலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரி பகுதியில் ஊரடங்கை மீறி சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

"பல நாள்களாக ஒரே இடத்தில் முடங்கியிருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டோம், தற்போது வேலையில்லாமல் பொருளாதார சிக்கல்களால் தவித்து வருகிறோம். நாங்கள் வீட்டுக்குச் செல்ல உதவுங்கள்"

சென்னையில் ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர், கிண்டி, வேளச்சேரி என பல பகுதிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டமாகக் கூடி வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கெனவே சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், இதுபோன்ற சம்பங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்ற அச்சம் எழாமல் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் மனநிலையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்கிறார் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர் கீதா.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மூன்று வகையான புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமானம் செய்யும் இடங்களிலேயே தார்ப்பாய், கூரை வைத்து தற்காலிக கூடாரம் அமைத்து தங்குபவர்கள். 7 முதல் 8 ஆண்டுகள் என நீண்ட காலமாக இங்கு தங்கி பணியாற்றுபவர்கள், நகரின் பல பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறார்கள். இவர்களைத் தவிர்த்து, உணவகங்கள், கடைகளில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களும் உள்ளனர்.

உண்ண உணவின்றி தங்க இடமின்றி போராட்டம் செய்தவர்களைத் தான் மாநாகராட்சி அலுவலர்கள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 20 லட்சமாகக் கூட இருக்கலாம். உணவகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களே இருக்கிறார்கள்.

சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்களின் போராட்டம்

தமிழ்நாட்டில் அவர்கள் இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். சென்னையில் மட்டும் சுமார் 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால், இவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள்.

அவ்வாறு செய்யாத அரசு, இவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை. அரசின் சேமிப்புக் கிடங்குகளில் நான்கு ஆண்டுகளுக்கு தேவையான உணவுப் பொருள்கள் இருக்கின்றன. ஆனாலும் இவர்களுக்குப் போதிய அளவு உணவு கொடுக்க அரசு தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு அரசி, பருப்பு, எண்ணெய், உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கலாம். அரசு அறிவித்த நிவாரணம் வெகு சிலருக்கே கிடைத்து.

ஒட்டுமொத்தமாக எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என அரசுக்கே தெரியவில்லை. தற்போதைய சூழலில், விருப்பப்படுபவர்களை கரோனா பரிசோதனை செய்து சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்றார்.

சிறப்பு ரயில் தொடர்பான செய்தியை அறிந்த ஒருசிலர் சென்னை மாநதராட்சி அலுவலகத்தில் கூடினர். ஆனால் அவர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். "மாநில அரசு அழைத்து வரும் தொழிலாளர்கள் தான் சிறப்பு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். அதுவரை இங்கு வராதீர்கள்" எனவும் ரயில்வே நிர்வாகமும் திட்டவட்டமாக அறிவித்தது. இதுவரை இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்காததால், தமிழ்நாட்டிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க: சைக்கிளிலேயே உத்தரப் பிரதேசம் செல்லும் வட மாநிலத்தவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.