ETV Bharat / state

அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை: அதிமுக பதிலளிக்க உத்தரவு - MHC seeks explanation from admk about anna labour union election

அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க அதிமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

admk
அதிமுக
author img

By

Published : Aug 14, 2021, 5:39 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியில் உள்ளேன். இதுமட்டுமின்றி அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினராகவும் உள்ளேன்.

இந்தச் சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிற்சங்க பேரவைகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என கடந்த 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தல் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை 5 கட்டங்களில் நடத்தப்படவுள்ளது. நிர்வாகிகள் தேர்தலுக்காக நாளிதழில் கடந்த 6 ஆகஸ்ட் தேதி அறிவிப்போடு வெளியிடப்பட்டதாகும், தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போன்று தேர்தல் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சங்க உறுப்பினர்கள் சுமார் எட்டாயிரம் பேர் ஒரே இடத்தில் வாக்களிக்கவுள்ளனர். 5 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்கள் ஓரே இடத்தில் வாக்களிப்பது என்பது இயலாத ஒன்று. தற்போதைய கரோனா பரவல் தடுப்பதற்காக மாநில அரசு பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தேவையற்ற கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இது பொதுமக்களுக்கு பாதிப்பு எற்படுத்தும். தேர்தல் விதிகளுக்கு புறம்பாக கரோனா பரவல் நேரத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், " மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அண்ணா பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: பிறந்து 7 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு எருக்கம் பால் - பாட்டி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.