ETV Bharat / state

பாஜகவின் தாமரை சின்னத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - Election Commission of India

BJP Lotus Symbol: பாஜகவிற்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வைக்கப்பட்ட முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

appeal-in-mhc-seeking-annulment-of-allotment-of-lotus-symbol-to-bjp
பாஜகவின் தாமரை சின்னத்தை ரத்து செய்ய கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 4:43 PM IST

Updated : Oct 26, 2023, 5:04 PM IST

சென்னை: பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்ட 'தாமரை சின்னம்' ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவருமான காந்தியவாதி டி. ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்து உள்ளதாகவும்' குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!

ஆனால், தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல் இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். எனவே, தனது மனுவைப் பரிசீலித்து, பாஜக-வுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டு" என மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்ஐஏ-க்கு மாற்ற வேண்டும்” - வானதி சீனிவாசன்

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன்பு இன்று (அக்.26) முறையிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இதையும் படிங்க: திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் மீது குற்றச்சாட்டு - அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்ற அமர்வு மறுப்பு!

Last Updated : Oct 26, 2023, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.