ETV Bharat / state

சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட பாலியல் புகார்: "எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" - சிபிசிஐடி-க்கு சராமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்! - sivasankar baba sexual issue in chennai

கடந்த 2015ஆம் ஆண்டு சிவசங்கர் பாபாவின் மீது தொடரப்பட்ட பாலியல் புகாரை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்த நிலையில், வழக்குபதிவு குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட பாலியல் புகார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:31 PM IST

சென்னை: பிரபல தனியார் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு இன்று விசாரனைக்கு வந்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல சர்வதேச பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது கடந்த 2015ஆம் ஆண்டில், அதே பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்னிறுத்தினார். அந்த புகாரில், மாணவி அவரது பிறந்த நாளன்று ஆசிர்வாதம் வாங்க சென்றபோதும், பின்னர் ஆஞ்சனேயர் கோயிலுக்கு மீண்டும் வரவழைக்கப்பட்டு, பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினார்.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது, 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப்.13) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றது எனவும் அரசியல்வாதிகள் மற்றும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதம் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக, முறையான விசாரணை இன்றி, தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புகாரளித்த பிறகு நடைபெற்ற பள்ளி நடன நிகழ்ச்சியில், புகார் கொடுத்த அந்த மாணவி கலந்து கொண்டதை குறிப்பிட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தன் மீது உள்ள பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசங்கர் பாபாவின் தரப்பு வாதமும் முன்வைக்கப்பட்டது.

வாதங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது? என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஆஜராகாத அமலாக்கத்துறையால் வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.