ETV Bharat / state

விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Madras High Court news today: விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 9:52 PM IST

சென்னை: சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் உயிரிழந்தது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செ.7) விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட குற்ற விபரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றனர். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்படுவதாக கூறிய நீதிபதிகள், விழுப்புரத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, கட்சிகளின் பெயரில் கொடிக்கம்பங்கள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என்றனர்.

இதற்கு விழுப்புரம் சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் தரப்பில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவின்படி பேனர்கள் வைக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக, பொது இடத்தில் விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால், மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் விளம்பர பேனர்கள் வைக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமின்றி, போக்குவரத்து காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் எனவும், அதற்கு முறையாக வரி மின் இணைப்பு ஆகியவற்றைப் பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேனர்கள் வைப்புக்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"மோடி என்றால் ஊழல்; ஊழல் என்றால் மோடி" - கே.பாலகிருஷ்ணன் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.