ETV Bharat / state

விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக எம்எல்ஏ குடும்பத்தினருக்கு நீதிமன்றம் உத்தரவு! - சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம்

Dowry Harassment: மருமகள் அளித்த வரதட்சணை கொடுமை புகார் தொடர்பான காவல் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் குடும்பத்தினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:23 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பாமகவைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கர். இவருக்கும், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் மனோலியா புகார் ஒன்றை அளித்தார். அதில், திருமணத்தின்போது மணமகன் வீட்டிற்கு வரதட்சணையாக 200 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ள நிலையில், மேலும் வரதட்சணை கேட்டு கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரில், சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம், மகன் சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சதாசிவம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த பிப்ரவரி முதல் மருமகள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளுடன் புகாரளித்துள்ளதாக கூறினார்.

காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை இருக்கிறதா என காவல் துறை தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, செப்டம்பர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சதாசிவம் குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு, முன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "நீட் தேர்வுக்கு எதிராக ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும்" - அமைச்சர் உதயநிதி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.