ETV Bharat / state

உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச நளினி, முருகன் கோரிக்கை: அனுமதியளித்த உயர் நீதிமன்றம்! - MHC allow nalini and murugan interaction with abroad relation

சென்னை: நளினி, முருகன் ஆகியோர் வெளிநாடுகளிலுள்ள உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 17, 2021, 4:58 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையிலுள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்கக் கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜிவ் கொலை வழக்கின் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, “மத்திய அரசு சார்பில் பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அயல்நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நளினி, முருகன் ஆகியோரை வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும். சிறை அலுவலர்கள் மூலம் அவர்கள் பேசுவதை கண்காணித்தாலும் முக அசைவு, உருவ அசைவில் கருத்துக்களை பரிமாற்றக் கூடும்.

தொடர்ந்து சிறைத் துறை தரப்பில் 2011ஆம் ஆண்டு அரசாணையின் படி சிறைக்கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதியில்லை. இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒரு முறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் மூன்று அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமையில்லை. இது சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும், முருகன் கடந்த ஏப்ரல் மாதம் கூட, வேலூரிலுள்ள அவரது சகோதரியுடன் பேசியதாகவும், நளினியும் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜூன் 17) தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், வேலுமணி அமர்வு நளினி, முருகன் ஆகியோர் லண்டனிலுள்ள முருகனின் சகோதரியிடமும், இலங்கையிலுள்ள முருகனின் தாயாருடனும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'காணாமல்போன கோயில் சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுங்கள்' - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.