ETV Bharat / state

3 நைஜீரிய நாட்டு கைதிகள் மீது புழல் சிறையில் தாக்குதல்? - நீதிபதிமன்றம் அதிரடி உத்தரவு - புழல் சிறையில் தாக்குதல்

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூன்று கைதிகளை புழல் சிறை வார்டன் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 8:27 PM IST

சென்னை: நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகஸ்டீன், எட்வின் மற்றும் இம்மானுவேல் ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடந்த 30ஆம் தேதி புழல் சிறையில் அகஸ்டீனை சந்தித்திருக்கிறார். அப்போது, சிறை வார்டன்கள் தங்கள் மூன்று பேரையும் தாக்கியதாகவும், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் சங்கரசுப்புவிடம் அகஸ்டீன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோரது அமர்வில் இன்று (செப்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, கடந்த 21ஆம் தேதி சோதனை நடத்தியபோது அகஸ்டீன் உள்ளிட்ட மூவரிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, இரண்டு வழக்கறிஞர்களை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கைதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் துணை வார்டன் சாந்தகுமார் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

முன்னதாக, வார்டன் சாந்தகுமார் சிறைக்குள் ரோந்து சென்றபோது நைஜீரிய கைதி அகஸ்டின், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கைதி தனது கையில் வைத்திருந்த உணவு சாப்பிடும் தட்டால் வார்டனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அங்கிருந்த சிறைக்காவலர்கள் நைஜீரிய கைதியை தடுத்து சிறையில் அடைத்தனர். சாந்தகுமார் கையில் காயத்துடன் சிறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இதனால், நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மூவருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பழங்குடியின பெண்ணை தாக்கி நிர்வாண ஊர்வலம்; தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.