ETV Bharat / state

எம்ஜிஆர் சிலைகளை மறைக்க தேவையில்லை - சத்யப்பிரதா சாஹு - எம்ஜிஆர் சிலை

சென்னை: எம்.ஜி.ஆர் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சத்யப் பிரதா சாஹு
author img

By

Published : Mar 30, 2019, 4:53 PM IST

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 70.90 கோடி பணம், ரூ.88 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.22.94 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் துறைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது உண்மைதான்.

காவல்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவுச் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளில் 2907 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்810 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் மையங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைக்கத் தேவையில்லை. சமீபத்தில் மறைந்த தலைவர்களின் சிலைகளை பொதுமக்கள் பார்க்காத படி மறைக்கப்படும். இதேபோல் எம்.ஜி.ஆர் சிலைகளை மறைக்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.03.19

தேர்தலை தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலைகள் மறைக்கத் தேவையில்லை... 
சத்தியப் பிரதா சாஹு...

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்தித்தார் அப்போது, 
ஏப்ரல் 2 ல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது..
ஏப்ரல் 3 ல் சுனில் அரோரா வுடன், உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் சுனில் அரோரா... வருமானவரித் துறை பறிமுதலையும் சேர்த்து 70.90 கோடி இன்று வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. 

88 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
22.94 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
துறைமுருகன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளது வருமானவரித் துறை அதிகாரிகள் தான்... சேதனைக்குப்பின் தகவல் கொடுப்பார்கள்.. காவல்துறை மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது..

 2014 ம் ஆண்டு தேர்தல் வழக்குகளில் 2907 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
810 பேர் தண்டனை பெற்றுள்ளனர்  2014 ல்...
சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் இடம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.. நீண்ட காலத்திற்கு முன் மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைக்கத் தேவையில்லை... சமீபத்தில் மறைந்த தலைவர்கள் சிலைகள் பொதுமக்கள் பார்க்காத படி மறைக்கப்படும்.. 
தேர்தலை தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலைகள் மறைக்கத் தேவையில்லை என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.