ETV Bharat / state

'டெல்லியைப் போல் சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை'

சென்னை: டெல்லியைப் போன்று சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

puviyarasan
author img

By

Published : Nov 4, 2019, 3:12 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "இன்று காலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இவை வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு காற்று மாசு வராது

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக நவ.4, 5 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளுக்கும், நவம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

'மகா' புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதால் வருகின்ற 6ஆம் தேதி இரவோ, 7ஆம் தேதி அதிகாலையிலோ குஜராத் மாநிலம் போர்பந்தர் - தியோ இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. கரையை புயல் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டெல்லியில் ஏற்பட்டுள்ளது போல சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை. தற்போது காணப்படுவது பனிப்புகை மட்டுமே. இது வெயில் வந்ததும் கரைந்து விடும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை விவரம் வெளியிட சிபிஐ மறுப்பு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 04.11.19

டெல்லியில் ஏற்பட்டுள்ளது போல சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை, தற்போது காணப்படுவது பனிப்புகையே, இது வெயில் காலங்களில் கரைந்து விடும்; வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,

இன்று காலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது, இது
வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு மூன்று தினங்களில்
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
வெப்பசலனம் காரணமாக அடுத்த
இரு தினங்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைவு. அதிகபட்ச 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சூலூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர், கோவை மாவட்டம் பீலமேட்டில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக 4 மற்றும் 5 தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளுக்கும் 6,7,8 தேதிகளில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறை காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்..

மகா புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது,
வரும் 6 ஆம் தேதி இரவோ அல்லது 7 ஆம் தேதி அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் - தியோ இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
கரையை புயல் கடக்கும் போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும்..

டெல்லியில் ஏற்பட்டுள்ளது போல சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை, தற்போது காணப்படுவது பனிப்புகையே, இது வெயில் காலங்களில் கரைந்து விடும் என்றார்..

tn_che_01_metrology_press_meet_by_puviyarasan_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.