சென்னையை அடுத்த பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் 100 அடி உயரம் உள்ள இரண்டாவது மாடியிலிருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
100 அடி உயரத்திலிருந்து தற்கொலை செய்துகொண்டவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பணிச்சுமை: மன அழுத்தத்தில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை